திருமலை நாயக்கர் அரண்மனை
திருமலை நாயக்கர் அரண்மனை (Thirumalai Nayak Palace) அல்லது திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தெற்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இதத் தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிடக் கலையில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும்
இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதி யே, தற்போது அஞ்சியுள்ளதாக கருதப்படுகிறது. பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர் பிரான்சிஸ் நெப்பியர் பொ.ஊ. 1872-இல் இவ்வரண்மனையைப் புதுப்பித்தார். தமிழக அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும். இவ்வரண்மனையின் நீட்சியாக, பத்துத் தூண் பகுதி இருந்தது.
திருமலை நாயக்கர் அரண்மனை :
கி.பி.1623- இருந்து 1659 வரை மதுரையைத் தலைநகராக்கிக் கொண்டி சீரும் சிறப்பாக ஆண்ட திருமலைநாயக்கரால் இவ்வரண்மனை கட்டப்பட்டது. தென் இந்தியாவிலேய யேஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்ததுஇதுவே.
இவ்வரண்மனையை திருமலைமன்னர்-1636ல் கட்டீ முடித்தார், இதில் தம் 75 வயதீவரை மனைவியருடன் வாழ்ந்தார். திருமலை. மன்னர் இவ்வரண்மனையைக் கட்டிய பொழுதீ இப்பொழுது இருக்கிற அளவிபோல் நான்கூ மடங்கு பெரியதாகத் திகழ்ந்தது.
இவ்வரண்மனையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.இதில் சொர்க்கவிலாசம், ரங்கவிலாசம். என்ற இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. இதை தவிர பதினெட்டு வீத இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பூசைசெய்யும் இடம், அரியணைமண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினரும், பணிசெய்பவரும் வசிக்கும் இடம், வசந்தவாவி, மலர்வனங்கள் முதல்யன இருந்தன. திருமலைநாயக்கர் சொர்க்கவிலாசத்திலும், அவர்தம்பி முத்தியாலீ நாயக்கர் ரங்கல்லாசத்திலும் பாழ்ந்தனர். இப்பொழுது எஞ்சியுள்ள பகுதியே சொர்க்க விலாசம் ஆகும்.
இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலையைப் பாணியில் வடிவமைக்கப்பட்டது. இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. சூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஒவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில், இந்த அரண்மனை, இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றது அரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டது. ‘சொர்க்க விலாசம்’ மன்னரின் வசிப்பிடமாகவும், ‘அரங்க விலாசம்’ அவரது தமியான முக்கியமான நாயகரின் இருக்கை இருப்பிடமாகவும் இருந்தது.
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாட்ட சாலை, பல்லக்கு சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குழுமபத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.
Comments
Post a Comment